Home இந்தியா ஏவுகணைகளை விற்க நட்பு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை!

ஏவுகணைகளை விற்க நட்பு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை!

977
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியாவில் தயாரிக்கப்படும் பிராமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆகாஷ் வான் தற்காப்பு ஏவுகணைகள் ஆகியவற்றோடு, இராணுவம் தொடர்பான வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றையும் நட்பு நாடுகளுக்கு விற்பனை செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இது குறித்து தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “இந்தியாவின் ஏவுகணைகள் மீதான ஆர்வம் வளர்ந்து வருகின்றது. எனவே அரசாங்கம் அதனை நட்பு நாடுகளுக்கு விற்பனை செய்ய விரும்புகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தற்காப்பு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளில், அதன் செலவுகள் குறித்து நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருவது சில நேரங்களில் எரிச்சலூட்டக்கூடியதாக இருந்தாலும் கூட, இந்திய ஏவுகணைகள் மீதான ஆர்வம் இன்னும் நிலைத்திருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice