Home நாடு சண்டகான்: ஜசெகவின் ஸ்டீபன் வோங் மீண்டும் போட்டி

சண்டகான்: ஜசெகவின் ஸ்டீபன் வோங் மீண்டும் போட்டி

838
0
SHARE
Ad
சண்டகான் ஜசெக 52-வது ஆண்டு விழாவில் லிம் கிட் சியாங்

கோத்தா கினபாலு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் சண்டகான் தொகுதியில் ஜசெகவின் வேட்பாளராக சபா மாநில ஜசெக தலைவர் ஸ்டீபன் வோங் தியன் பாட் நிறுத்தப்படுவார் என லிம் கிட் சியாங் அறிவித்தார்.

சபா மாநிலத்தின் நகர்ப்புறத் தொகுதிகளில் ஒன்றான சண்டகானில் 2013 பொதுத் தேர்தலில் 1,088 வாக்குகள் பெரும்பான்மையில் ஸ்டீபன் வோங் வென்றார்.

சுமார் 53% விழுக்காடு சீன வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சண்டகான். சபா மாநிலத்தில் சண்டகான் மற்றும் கோத்தா கினபாலு என இரண்டு தொகுதிகளை ஜசெக 2013 பொதுத் தேர்தலில் கைப்பற்றியது.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை சண்டகானில் நடைபெற்ற ஜசெக கட்சியின் 52-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது லிம் கிட் சியாங் சண்டகான் வேட்பாளர் நியமனத்தை அறிவித்தார்.