Home நாடு பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் நடைமுறைக்கு வந்தது!

பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் நடைமுறைக்கு வந்தது!

808
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் 2018, அரசாங்கப் பதிவேட்டில் எழுதப்பட்டு, இன்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

இது குறித்து இன்று நடைபெற்ற தேசிய செய்தியாளர் தினக் கொண்டாட்ட துவக்க விழாவில் பேசிய நஜிப், “எனக்குத் தெரியும் சில செய்தியாளர்களுக்கு, இந்தப் புதிய சட்டம் கவலையளிக்கலாம். செய்தி எழுதும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக நினைக்கலாம்.

“ஆனால், அச்சுப் பத்திரிக்கை மற்றும் பதிப்பகச் சட்டம் 1984, பிரிவு 8ஏ-வின் படி, அது சரியான எண்ணம் கிடையாது. காரணம், பொய்யான செய்திகளை வெளியிடுவது குற்றம் என அதில் ஏற்கனவே உள்ளது” என்று நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice