Home நாடு தேர்தலுக்குப் பிறகு பொய் செய்திகள் வெளியிட்டோர் மீது நடவடிக்கை: அகமட் மஸ்லான்

தேர்தலுக்குப் பிறகு பொய் செய்திகள் வெளியிட்டோர் மீது நடவடிக்கை: அகமட் மஸ்லான்

1115
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் முடிந்த பிறகு, இதுவரையில் பொய் செய்திகளை வெளியிட்டோர் மீது பொய் செய்திகள் சட்டம் 2018-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்னோ உச்ச மன்றக் குழு உறுப்பினரான டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்திருக்கிறார்.

“தேர்தலுக்குப் பிறகு, தற்போது வரையில் பொய் செய்திகளை வெளியிட்டவர்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுப்போம்.

“பொய் செய்திகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான். அவருக்கு எதிராக அதிகமான பொய் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் குற்ற உணர்வே இருக்காதா?” என அகமட் மஸ்லான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.