Home நாடு தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றும் 11 நாடுகளின் பட்டியலில் மலேசியா!

தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றும் 11 நாடுகளின் பட்டியலில் மலேசியா!

934
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 5 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றி வரும் 11 நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றிருக்கிறது.

“அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் உலக அறிக்கை: மரண தண்டனைகள் மற்றும் நிறைவேற்றங்கள் 2017” இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதில், சீனா, ஈரான், சவுதி அரேபியா, சோமாலியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், வடகொரியா ஆகியவற்றோடு மலேசியாவும், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மரண தண்டனைகளை நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2017-ம் ஆண்டு மட்டும், மலேசியாவில் 4 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அம்னெஸ்டி தெரிவித்திருக்கிறது.