Home நாடு தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் போட்டியா? – ஆருடங்களை மறுத்தார் நூருல்!

தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் போட்டியா? – ஆருடங்களை மறுத்தார் நூருல்!

818
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட ஆரூடங்களை அவர் இன்று புதன்கிழமை மறுத்திருக்கிறார்.

“நாங்கள் (பிகேஆர் தலைமை) இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்தப் பேச்சுவார்த்தையின் மத்தியில் தான் இருக்கிறோம். பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவேன் எனக் கூறப்படுவது ஆரூடம் மட்டுமே.

“நாளை ஜோகூர் செல்கிறேன். அடுத்து ஜோகூரில் போட்டியிடப்போகிறேன் என ஆரூடங்கள் கூறப்படும் என நம்புகிறேன்” என்று நூருல் இசா இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெர்மாத்தாங் பாவ் பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர், நூருல் இசாவும் தாயாரும், பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவருமான வான் அசிசா வான் இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது.