Home நாடு பண்டானில் வான் அசிசா! பெர்மாத்தாங் பாவ் செல்கிறார் நூருல் இசா!

பண்டானில் வான் அசிசா! பெர்மாத்தாங் பாவ் செல்கிறார் நூருல் இசா!

1133
0
SHARE
Ad
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதியாக்கப்படாத நிலையில், இறுதி நேரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்து வருகின்றன.

பண்டானில் நூருல் இசா நிறுத்தப்படுவார் என ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசா நிறுத்தப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி 2013-இல் வென்ற தொகுதி பண்டான் ஆகும்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அன்வாரின் முந்தையத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியை நூருல் இசா தற்காப்பார் என்றும் பிகேஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக அன்வாரின் மனைவி வான் அசிசா இருந்து வருகின்றார்.

நூருல் இசா தற்போது லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். ஆனால் அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றும், தனக்குப் பதிலாக பாஹ்மி பாட்சில் போட்டியிடுவார் என்றும் நூருல் இசா அறிவித்திருக்கிறார்.