Home நாடு அரசியல் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் போதைப் பொருள் வழக்கில் கைது!

அரசியல் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் போதைப் பொருள் வழக்கில் கைது!

1333
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசியல் கட்சி ஒன்றின் உலு சிலாங்கூர் தொகுதிக்கான, 30 வயதுடைய இளைஞர் பகுதித் தலைவர் போதைப் பொருள் உட்கொண்டதாக பரிசோதனை முடிவுகள் காட்டியதைத் தொடர்ந்து தேசிய போதைப் பொருள் தடுப்பு இலாகாவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தாங் காலியிலுள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 17) பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அந்த நபர் உலு சிலாங்கூரிலுள்ள போதைப் பொருள் தடுப்பு இலாகாவிற்குக் கொண்டுவரப்பட்டு சிறுநீர் பரிசோதனைகள் அவர் மீது மேற்கொள்ளப்பட்டபோது, அவர் ‘மெத்தாம்பெட்டாமின்’ (methamphetamine) என்ற இரகத்திலான தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை உட்கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அடுத்த 14 நாட்களுக்கு அந்நபர் கோலகுபு பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றும் அவரது கைது தொடர்பில் வேறு எந்தப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நபர் மீது பழைய குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னர் பண்டார் துன் ரசாக் அம்னோ தலைவர் ரிசல்மான் காரோக்கே இரவு விடுதியில் போதைப் பொருள் உட்கொண்டதாகத் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சிறுநீர் பரிசோதனை முடிவுகளில் அவர் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.