Home நாடு முகமட் இசா சமாட் மீண்டும் போட்டியிடவில்லை

முகமட் இசா சமாட் மீண்டும் போட்டியிடவில்லை

1050
0
SHARE
Ad

சிரம்பான் – முன்னாள் மந்திரி பெசாரும், முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ முகமட் இசா சமாட் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் பொய்த்து விட்டன.

முகமட் இசா தலைவராக இருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு மஇகாவின் வேட்பாளராக டத்தோ வி.எஸ்.மோகன் போட்டியிடுகிறார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியலை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் இன்று திங்கட்கிழமை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

முகமட் இசா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெம்போல் தொகுதியில் அவரது முன்னாள் அரசியல் செயலாளரும், நடப்பு அம்னோ ஜெம்போல் தொகுதியின் தலைவருமான முகமட் சலிம் ஷாரிப் போட்டியிடுகிறார்.