Home நாடு சுங்கை பூலோ: மீண்டும் சிவராசா – பிரகாஷ் ராவ் மோதுகின்றனர்.

சுங்கை பூலோ: மீண்டும் சிவராசா – பிரகாஷ் ராவ் மோதுகின்றனர்.

976
0
SHARE
Ad

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் கட்சியின் வழக்கறிஞர் ஆர்.சிவராசா அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிட, அவருக்கு எதிராக தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளராக பிரகாஷ் ராவ் போட்டியிடுகிறார்.

முன்பு சுபாங் என்று அழைக்கப்பட்ட இந்தத் தொகுதி தற்போது சுங்கை பூலோ எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது.

கடந்த 2013 பொதுத் தேர்தலிலும் சுங்கை பூலோ (சுபாங்) தொகுதியில் சிவராசா-பிரகாஷ் ராவ் போட்டியிட்டனர்.

#TamilSchoolmychoice

சுங்கை பூலோ தொகுதியில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது. நுரிடா பிந்தி முகமட் சாலே பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து சுங்கை பூலோவில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பிஎஸ்எம் கட்சியின் சைனுர்ரிசாமான் பின் மொஹ்ரம் போட்டியிடுவதால் இங்கு 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.

NEGERI SELANGOR
Parlimen P.107 – SUNGAI BULOH
NAMA PADA KERTAS UNDI PARTI
PAKAS RAO A/L APPLANAIDOO BN
SIVARASA A/L K.RASIAH PKR
NURIDAH BINTI MOHD SALLEH PAS
ZAINURRIZZAMAN BIN MOHRAM PSM