பெக்கான் – 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராக இருந்து ஓய்வு பெற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, தனது 92 வயதில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராகி தற்போது 14-வது பொதுத்தேர்தலைச் சந்திக்கிறார்.
பொதுத் தேர்தலுக்கு முந்திய பராமரிப்புப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் ஆட்சியின் கீழ் மலேசியா ஊழல் மிக்க ஒரு நாடாக ஆகிவிட்டதாகவும், அவரிடமிருந்து நாட்டை மீட்கவே தான் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும் கூறி வரும் மகாதீர், நஜிப் ஆட்சியைக் கவிழ்த்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் தற்போது கடுமையாக உழைத்து வருகின்றார்.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை நஜிப்பின் சொந்தத் தொகுதியான பெக்கானில் உள்ள அம்னோ அலுவலகத்திற்கு முன் இருந்த காப்பிக் கடையில் மகாதீர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனால் அந்த இடம் சற்று பரபரப்படைந்தது குறிப்பிடத்தக்கது.