Home தேர்தல்-14 அனல் பறக்கும் பிரச்சாரத்திலும் மருத்துவத்தை மறக்காத டாக்டர் சுப்ரா!

அனல் பறக்கும் பிரச்சாரத்திலும் மருத்துவத்தை மறக்காத டாக்டர் சுப்ரா!

1027
0
SHARE
Ad

சிகாமாட் – சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். அதுபோலத்தான் ஒருவரின் தொழிலும்!

சிங்கை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறையில் கல்வி பயின்று, முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் தோல்வியாதித் துறையில் மருத்துவ நிபுணராகப் பணியாற்றியவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

சிகாமாட் தாமான் வாவாசன் இரவுச் சந்தையில் டாக்டர் சுப்ரா உள்ளூர் வாக்காளர்களைச் சந்தித்தபோது…

14-வது பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் நான்காவது தவணைக்கு போட்டியிடுகிறார் டாக்டர் சுப்ரா.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை (3 மே 2018) சிகாமாட்டில் உள்ள தாமான் வாவாசான் பகுதியில் பாசார் மாலாம் எனப்படும் இரவுச் சந்தையில் உலா வந்து வாக்காளர்களைச் சந்திக்கும் பணியில் அவர் ஈடுபட்டபோது, எதிர்ப்பட்ட மலாய் வாக்காளர் ஒருவரின் முகத்தையும் பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கினார் டாக்டர் சுப்ரா.