Home தேர்தல்-14 “பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு!

“பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு!

1315
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்பார்க்கப்பட்டது போலவே பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஏற்கனவே தியான் சுவா அறிவித்திருந்தது போல், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் 22 வயதான பிரபாகரனுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

பக்காத்தான் தலைவர்களின் ஒப்புதல் படி தான் பிரபாகரனுக்குத் தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் தியான் சுவா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“பிரபாகரன் இளைஞராகவும் புத்துணர்வோடு செயல்படுபவராகவும் இருக்கின்றார். அவர் பொதுத்தேர்தலை எதிர்க்கொள்ள அவருக்கு பக்க பலமாக இருப்பேன்.

“நாங்கள் பதாகைகள் அச்சிடுகின்றோம். அதன் படி பத்து மக்கள் அவரைத் (பிரபாகரனைத்) தேர்ந்தெடுப்பார்கள். பத்து நாடாளுமன்றம் பக்காத்தானுக்கே திரும்ப வேண்டும் அது தான் முக்கியம்” என்று தியான் சுவா தெரிவித்தார்.

மேலும், பிரபாகரனுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள பத்து தொகுதிக்கு பக்காத்தான் தலைவர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் தியான் சுவா குறிப்பிட்டார்.