Home தேர்தல்-14 தேர்தல் 14: தியான் சுவாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

தேர்தல் 14: தியான் சுவாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

944
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில், தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, தாக்கல் செய்திருந்த மனுவை இன்று வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேர்தல் அதிகாரியின் வேட்புமனு நிராகரிப்பு முடிவை மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென்றும், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தேர்தல் மனுவாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி நோர்டின் ஹசான் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தியான் சுவா தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மே 9-ம் தேதி 14-வது பொதுத்தேர்தல் முடிந்த பிறகே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.