Home வணிகம்/தொழில் நுட்பம் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு!

பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு!

1218
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகளவில் இருக்கும் சுமார் 330 மில்லியன் டுவிட்டர் பயனர்களும், உடனடியாகத் தங்களது டுவிட்டரின் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) மாற்றும் படி அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

டுவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்துப் பயனர்களின் கடவுச்சொல்லும் உள்கணினி அமைப்பில் சேமிக்கப்பட்டது.

இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனம் அக்கோளாறை சரிசெய்துவிட்டது என்றாலும், டுவிட்டர் பயனர்கள் தங்களது கடவுச்சொல்லை மாற்றிவிடும் படி அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்சே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் அக்கோளாறை சரிசெய்துவிட்டோம். விதிமுறை மீறலோ அல்லது தவறாகப் பயன்படுத்தியதற்கான அறிகுறியோ இல்லை. என்றாலும், நீங்கள் உங்களது கடவுச்சொல்லை மாற்றிவிடுவது நல்லது” என்று ஜேக் டோர்சே தெரிவித்திருக்கிறார்.