Home தேர்தல்-14 “93 வயதில் தொடர்ந்து 1 மணி நேரம் பேசுகிறேன்” – ஆரோக்கியம் குறித்த கேள்விக்கு மகாதீர்...

“93 வயதில் தொடர்ந்து 1 மணி நேரம் பேசுகிறேன்” – ஆரோக்கியம் குறித்த கேள்விக்கு மகாதீர் பதில்!

894
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9-ம் தேதி பொதுத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், பேச்சின் ஊடே அடிக்கடி இருமிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மகாதீர், “குவாந்தானில், 1 மணி நேரம் பேசினேன். நான் இளமையாக இருக்கும் போது இது போல் தொடர்ந்து 1 மணி நேரம் பேசுவது வழக்கம்.

#TamilSchoolmychoice

“இப்போது எனக்கு வயதாகிவிட்டது. இப்போதும் என்னால் 1 மணி நேரம் பேச முடியும். என்னைப் போல் 93 வயதில் 1 மணி நேரம் பேச விரும்புபவர் யாராவது இருக்கிறாரா? காட்டுங்கள் அவரைப் பார்க்க விரும்புகின்றேன்” என்று மகாதீர் பதிலளித்தார்.