Home தேர்தல்-14 “ஒருத்தர் ஜெயிக்கட்டும் நிர்வாணமா ஓடுறேன்” – முன்னாள் பிஆர்எம் தலைவர் சவால்!

“ஒருத்தர் ஜெயிக்கட்டும் நிர்வாணமா ஓடுறேன்” – முன்னாள் பிஆர்எம் தலைவர் சவால்!

1628
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – 14-வது பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் பிஆர்எம் (பார்ட்டி ராயாட் மலேசியா) கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால், கொம்டாரைச் சுற்றி நிர்வாணமாக ஓடுகிறேன் என அக்கட்சியின் பினாங்கு மாநில முன்னாள் தலைவர் சவால் விடுத்திருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்த டத்தோ கேரி நாயர் (வயது 66) கூறுகையில், “அவர்களில் (பிஆர்எம்) ஒருவர் ஜெயிக்கட்டும் நான் கொம்டாரைச் சுற்றி நிர்வாணமாக ஓடுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் பிஆர்எம் தேசிய உதவித் தலைவரும், கடந்த 10 ஆண்டுகளாக அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்து வந்த கேரி நாயர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பிஆர்எம் பொதுச்செயலாளர் கோ ஸ்வீ யோங் கூறுகையில், “கேரி தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். காரணம், கட்சி அவரது விருப்பத்திற்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது” என்று தெரிவித்திருக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலில் பிஆர்எம் கட்சி 31 சட்டமன்றங்களிலும், பல்வேறு மாநிலங்களில், 6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.