Home 13வது பொதுத் தேர்தல் ஜெர்லூன் நாடாளுமன்றத்திலேயே போட்டியிட முக்ரிஸ் விருப்பம்

ஜெர்லூன் நாடாளுமன்றத்திலேயே போட்டியிட முக்ரிஸ் விருப்பம்

518
0
SHARE
Ad

e_pg08mukhrizலங்காவி, மார்ச் 28 –  வரும் 13வது பொதுத்தேர்தலில் தனது ஜெர்லூன் நாடாளுமன்ற தொகுதியையே தாம் மீண்டும் போட்டியிட்டு தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக கெடா அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் டத்தோ முக்ரிஸ் மகாதீர் (படம்) தெரிவித்தார்.

மேலும் முக்ரிஸ் தெரிவிக்கையில், தமக்கு, தான் எங்கு நிற்கப்போகிறோம் என்பது இது வரை தெரியாது என்றும் ஜெர்லூன் தனது சொந்த விருப்பமே தவிர தனக்கு நாடாளுமன்றத்தில் இடம் ஒதுக்குவதா அல்லது சட்டமன்றத்திலா என்று முடிவு செய்வது முற்றிலும் பிரதமரின் விருப்பமே என்றார்.

தற்போது ஜெர்லூன் நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக தொழில்துறை துணை அமைச்சருமான முக்ரீஸிடம் அவர் எந்தத் தொகுதிக்குக் குறிவைத்துள்ளார் என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலுரைத்தார்.

#TamilSchoolmychoice

முக்ரிஸூக்கு கெடாவில் ‘மந்திரி பெசார்’ பதவியா?

இதற்கிடையில் தற்போது மக்கள் கூட்டணி வசமுள்ள கெடா மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் முக்ரிஸ் சட்டமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தேசிய முன்னணி கெடா மாநிலத்தைக் கைப்பற்றினால் பின்பு கெடா ‘மந்திரி பெசாராக’ ஆக்கப்படலாம் என வதந்திகள் உலவி வருகின்றன.