Home தேர்தல்-14 முக்ரிஸ் மகாதீர் கெடா மந்திரி பெசாராக பதவியேற்றார்

முக்ரிஸ் மகாதீர் கெடா மந்திரி பெசாராக பதவியேற்றார்

1072
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பெர்சாத்து கட்சியின் தலைவர்களில் ஒருவரும் துன் மகாதீரின் மகனுமான முக்ரிஸ் மகாதீர் இன்று வெள்ளிக்கிழமை மாநில மந்திரி பெசாராக கெடா சுல்தான் சாலேஹூடின் சுல்தான் பட்லிஷா முன்னிலையில் பிற்பகல் 4.00 மணியளவில் பதவியேற்றார்.

முக்ரிஸ் ஏற்கனவே 2013-இல் கெடா மாநில மந்திரி பெசாராக பதவி வகித்திருக்கிறார்.

எனினும், அப்போதைய பிரதமர் நஜிப்புடனான உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முக்ரிஸ், சில ஆண்டுகளுக்குப் பின்னர் மந்திரி பெசார் பதவியிலிருந்து நஜிப்பால் நீக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தலில் ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதியிலும் முக்ரிஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.

கெடா மாநிலத்தில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. பாஸ் 15 தொகுதிகளிலும், தேசிய முன்னணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.