Home தேர்தல்-14 சபா நெருக்கடி: ஷாபி அப்டாலுக்கு ஆதரவாக 6 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள்!

சபா நெருக்கடி: ஷாபி அப்டாலுக்கு ஆதரவாக 6 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள்!

1099
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – நேற்று வியாழக்கிழமை இரவு மூசா அமான் சபா மாநில முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.

தேசிய முன்னணியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தனது வாரிசான் கட்சிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.

நான்கு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு உப்கோ கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பக்கம் தாவியுள்ளதாக அவர் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, சபா சட்டமன்றத்தில் பக்காத்தான் கூட்டணியின் பலம் 32 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதன் காரணமாக, பெரும்பான்மையை இழந்து விட்ட மூசா அமானை மாநில ஆளுநர் முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் ஷாபி அப்டால் அறைகூவல் விடுத்துள்ளார்.