Home தேர்தல்-14 முதல் கட்டமாக 10 அமைச்சர்கள் சனிக்கிழமை அறிவிப்பு

முதல் கட்டமாக 10 அமைச்சர்கள் சனிக்கிழமை அறிவிப்பு

1131
0
SHARE
Ad
வெள்ளிக்கிழமை (11 மே) பத்திரிக்கையாளர் சந்திப்பில் துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா – நேற்று பிரதமராகப் பதவியேற்ற துன் மகாதீர், முதல் கட்டமாக 10 முக்கிய அமைச்சர்கள் கீழ்க்காணும் அமைச்சுகளுக்கு நியமிக்கப்படுவர் என அறிவித்துள்ளார்:-

  1. நிதி அமைச்சு
  2. உள்துறை அமைச்சு
  3. தற்காப்புத் துறை
  4. கல்வி
  5. புறநகர் அமைச்சு
  6. பொருளாதார அமைச்சு
  7. பொதுப் பணித் துறை
  8. போக்குவரத்துத் துறை
  9. வெளிநாட்டுத் துறை
  10. பல்ஊடகம், அறிவியல், தொழில் நுட்பம்

நேற்றிரவு பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் துன் மகாதீர் பல்வேறு கூட்டங்கள் நடத்தி முடிவுகள் எடுத்து வருகிறார்.

பக்காத்தான் கூட்டணியின் தலைவர்கள் தங்களின் கட்சிகளின் சார்பாக அமைச்சர்களாக நியமிக்கப்படவிருப்பவர்களின் பட்டியலைத் தரும்படியும் தான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் சரி சமமாக நடத்தப்படுகின்றனர் என்றும் எல்லா முடிவுகளும் தீவிர கலந்தாலோசனைக்குப் பின்னரே எடுக்கப்படுகின்றன என்றும் மகாதீர் அறிவித்துள்ளார்.