Home தேர்தல்-14 “அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவிக்கவே இல்லை” – டாக்டர் சுப்ரா

“அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவிக்கவே இல்லை” – டாக்டர் சுப்ரா

1629
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிக்கை விடுத்ததாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருப்பது குறித்து கருத்துரைத்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தான் அவ்வாறு கூறவே இல்லை என மறுத்துள்ளார்.

கட்சிக்கான தனது சேவை தொடரும் என்றும் விரைவில் மஇகா தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப் போவதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்ததாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இணைய ஊடகம் இன்று தெரிவித்தது.

“ஆனால் அரசியலில் இருந்து விலகுவதாக எந்த ஓர் அறிக்கையையும் நான் வழங்கவில்லை. மக்களின் தீர்ப்பைத் திறந்த மனதுடன் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

2004 முதல் 3 தவணைகளாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வரும் டாக்டர் சுப்ரா, மே 9 பொதுத் தேர்தலில் சிகாமாட் தொகுதியைத் தற்காக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார்,

NEGERI JOHOR
Parlimen P.140 – SEGAMAT
PARTI MENANG PKR
MAJORITI UNDI 5476
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
KHAIRUL FAIZI BIN AHMAD KAMIL (PAS) 2676
DR. S. SUBRAMANIAM (BN) 18584
DATO’ SERI DR. SANTHARA (PKR) 24060

 

சிகாமாட் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா 5,476 வாக்குகள் பெரும்பான்மையில் சிகாமாட்டில் வெற்றி பெற்றார்.