Home தேர்தல்-14 ஜோகூர்: மந்திரி பெசார் பட்டியலில் மொகிதின் யாசின் இல்லை

ஜோகூர்: மந்திரி பெசார் பட்டியலில் மொகிதின் யாசின் இல்லை

1116
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் யார் என்பதை அம்மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இன்று சனிக்கிழமை அறிவிப்பார்.

ஜோகூர் பக்காத்தான் கூட்டணி தலைவரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று வெள்ளிக்கிழமை ஜோகூர் சுல்தானைச் சந்தித்து ஜோகூர் மாநிலத்தின் மந்திரிபெசாருக்கான பரிந்துரையை வழங்கியிருக்கிறார்.

மூன்று பேர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆனால், அந்தப் பட்டியலில் தனது பெயர் இல்லை என்பதையும் மொகிதின் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் மொகிதின் யாசின் இடம் பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.

ஜோகூர் சுல்தான் மொகிதின் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜோகூர் சுல்தானின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த சந்திப்பின்போது, துங்கு மகோத்தா துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிமும் உடனிருந்தார்.

படங்கள் – நன்றி: ஜோகூர் சுல்தான் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்