Home தேர்தல்-14 மஇகா மத்திய செயற்குழு புதன்கிழமை கூடுகிறது

மஇகா மத்திய செயற்குழு புதன்கிழமை கூடுகிறது

1417
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மோசமானத் தோல்விகளைச் சந்தித்த மஇகாவின் மத்திய செயற்குழு எதிர்வரும் புதன்கிழமை ( 16 மே 2018) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தோல்விகள், தேசிய முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகித்துச் செயல்படுவதா போன்ற விவகாரங்கள் இந்தக் கூட்டத்தின் விவாதங்களில் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஇகா கட்சித் தேர்தல்கள் தொடங்கப்பட வேண்டியுள்ளதால் முதல் கட்டமாக, கிளைகளுக்கான தேர்தல் தேதிகள், நடைமுறைகள் குறித்த முடிவுகளையும் புதன்கிழமை கூடும் மத்திய செயலவை எடுக்கும்.

#TamilSchoolmychoice

மஇகாவின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலும் இந்த ஆண்டு நடத்தப்படவிருக்கிறது.

கட்சித் தேர்தல்கள் குறித்த மறைமுகமான பிரச்சாரங்கள் அண்மையக் காலமாக மஇகா தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அனைத்து நிலைத் தலைவர்களும் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தற்போது, பொதுத் தேர்தல் தோல்வி, தேசிய முன்னணியே ஆட்சியில் இல்லாத நிலைமை ஆகிய நிலவரங்களால் பல மஇகா தலைவர்கள் கட்சித் தேர்தல்களில் தீவிரமாகக் களமிறங்கும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.