Home தேர்தல்-14 “மகாதீர் தலைமைத்துவத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்போம்” – அன்வார் அறிக்கை

“மகாதீர் தலைமைத்துவத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்போம்” – அன்வார் அறிக்கை

1077
0
SHARE
Ad
சனிக்கிழமையன்று அன்வாரைச் சந்தித்த மகாதீர் – படம்: நன்றி – அன்வார் இப்ராகிம் முகநூல் பக்கம்

கோலாலம்பூர் – துன் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் அனைவரும் முழுமையாக அணிவகுத்து நிற்கிறோம் என்றும் அவருடைய தலைமைத்துவதற்கு உறுதியான, நிலையான ஒத்துழைப்பை வழங்கி வருவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

அதே வேளையில் கடந்த சனிக்கிழமை (12 மே) தன்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்த மகாதீருக்குத் தனது நன்றியையும் அன்வார் தெரிவித்துக் கொண்டார்.

அன்வாரின் அறிக்கையும், மகாதீரும் அவரும் மருத்துவமனையில் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் புகைப்படமும், அன்வார் இப்ராகிமின் முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

அதேவேளையில் அமைச்சரவை நியமனங்கள் போன்ற விவகாரங்களில் தாங்களும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என பிகேஆர் தலைவர்கள் விரும்புகின்றனர் என்றும் அதனால்தான் அவர்கள் சில தயக்கங்களை வெளிப்படுத்துகின்றனர் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

“எனது கருத்துகளை மகாதீர் நல்ல முறையில் ஏற்றுக் கொண்டார். சில விவகாரங்களை பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

மூன்று அமைச்சர்களை மகாதீர் நியமித்த விவகாரத்தில் பிகேஆர் கலந்தாலோசிக்கப்படாமல் அந்த முடிவு எடுக்கப்பட்டது என ரபிசி ரம்லி கூறியிருந்தார்.