
கோலாலம்பூர் – நேற்று துன் மகாதீர் மூன்று அமைச்சர்களை நியமித்து விடுத்த அறிவிப்பு பிகேஆர் கட்சியைக் கலந்து பேசாமல், மகாதீர் எடுத்த ஒருதலைப் பட்ச முடிவு என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி சாடியுள்ளார்.
அதற்கேற்றாற்போல், துன் மகாதீர் அமைச்சர்களை அறிவித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிகேஆர் தலைவர் வான் அசிசா கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.