
கோலாலம்பூர் – புதிய அமைச்சரவை அறிவிப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை பிரதமர் துன் மகாதீர் உள்ளிட்ட பக்காத்தான் தலைவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் அன்வார் இப்ராகிமைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் (மேலே உள்ள படம்) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனினும், பக்காத்தான் தரப்பில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.