மலாக்கா – மலேசியாவின் வரலாற்று நகரான மலாக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது.
மலாக்கா மாநில முதல்வராக அமானா கட்சியைச் சேர்ந்தவரும், மலாக்கா மாநில பக்காத்தான் கூட்டணித் தலைவருமான அட்லி சஹாரி மலாக்கா முதலமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
அட்லி சஹாரி மலாக்காவின் புக்கிட் கட்டில் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி மலாக்காவில் மொத்தம் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 15 தொகுதிகளை பக்காத்தான் கூட்டணி வென்றுள்ளது. எஞ்சிய 13 தொகுதிகளில் தேசிய முன்னணி வென்றுள்ளது.
காடேக் தொகுதியில் வென்ற ஜி.சாமிநாதன்
மலாக்கா மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைப்பதைத் தொடர்ந்து காடேக் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜி.சாமிநாதன் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
காடேக் சட்டமன்றத்தில் மஇகா- தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட டத்தோ பன்னீர் செல்வத்தை 307 வாக்குகள் பெரும்பான்மையில் சாமிநாதன் தோற்கடித்தார்.
மலாக்கா மாநிலத்தில் வெற்றி பெற்ற ஒரே இந்திய சட்டமன்ற உறுப்பினராகவும் சாமிநாதன் இருப்பதால் அவரே மாநில ஆட்சிக் குழுவுக்கும் நியமனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
NEGERI | MELAKA |
---|---|
DUN | N.07 – GADEK |
PARTI MENANG | PKR |
MAJORITI UNDI | 307 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
PANIRCHELVAM A/L PICHAMUTHU (BN) | 4085 |
EMRANSYAH BIN ISMAIL (PAS) | 1865 |
G. SAMINATHAN (PKR) | 4392 |