Home தேர்தல்-14 பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வர் – சௌ கோன் இயோ

பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வர் – சௌ கோன் இயோ

1275
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சௌ கோன் இயோ பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

லிம் குவான் புதிய முதல்வரை இன்று காலை கொம்தார் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். 2008 முதல் கடந்த 10 ஆண்டுகளாக பினாங்கு முதல்வராக லிம் குவான் எங் பதவி வகித்து வந்தார்.

“பினாங்கு மாநிலம் எப்போதும் என் நினைவில் இருக்கும். பினாங்கில் இருந்து என்னை நீங்கள் பிரித்து வைக்கலாம். ஆனால் என்னிலிருந்து பினாங்கு மாநிலத்தை எப்போதும் பிரிக்க முடியாது” என்றும் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பினாங்கு முதல்வராக கோன் இயோ நாளை திங்கட்கிழமை பதவியேற்பார்.