Home வணிகம்/தொழில் நுட்பம் கென்னத் ஈஸ்வரன் தலைமையில் வியாபாரத் துறை மற்றும் கடனுதவிகள் பற்றிய விளக்கக்கூட்டம்

கென்னத் ஈஸ்வரன் தலைமையில் வியாபாரத் துறை மற்றும் கடனுதவிகள் பற்றிய விளக்கக்கூட்டம்

767
0
SHARE
Ad

kk-easwaranசிகாமாட், மார்ச் 28- எதிர்வரும் மார்ச் 30 ஆம் நாள், சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சிகாமாட், ஜாலான் புலோ காசாப்பில் உள்ள ஜே.கே.ஆர்.கிளப் சுக்கானில் மலேசிய இந்திய தொழில் முனைவர்களுக்காக அரசாங்கம் வழங்கியுள்ள கடனுதவிகள் பற்றி விளக்கக்கூட்டம்  நடைப்பெறவுள்ளது.

மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் டத்தோ கே.கே. ஈஸ்வரன் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்குவதுடன், வியாபாரத் துறையில் இந்தியர்கள் வெற்றியடைவதை பற்றியும்  மற்றும் கடனுதவிகள் பற்றியும் பேசவுள்ளார்.

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு இந்தியர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, ஜெயராமன் (017-4617776) என்ற தொலைபேசி எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.

இந்திய வர்த்தக சமூகத்தினருக்கும் வளர்ந்து வரும் இந்திய தொழில் முனைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல்

ஸ்கூடாய் டேவான் செர்பகுனா MPJBT ல் மார்ச் 30 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு ‘இந்திய வர்த்தக சமூகமும், வளர்ந்து வரும் இந்திய தொழில் முனைவர்களும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும்.

இந்நிகழ்விற்கும் மைக்கி தலைவர் கென்னத் ஈஸ்வரன் தலைமை தாங்கவுள்ளார். எனவே இக்கலைந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொள்ள  ஆர்வம் உள்ளவர்கள் பி.சிவக்குமாருடன்  012-7273725 என்ற தொலைபேசி எண்களின் வழிதொடர்பு கொள்ளலாம்.