Home தேர்தல்-14 மூன்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக அன்வாரின் பொதுக் கூட்டம்

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக அன்வாரின் பொதுக் கூட்டம்

875
0
SHARE
Ad

Datuk-Seri-Anwar-Ibrahim-610x356பெட்டாலிங் ஜெயா – நாளை புதன்கிழமை காலை 11.00 மணியளவில் கூடும் அரச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் அன்வார் இப்ராகிமுக்கான அரச மன்னிப்பு பரிசீலிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை பிற்பகலில் சுதந்திர மனிதனாக – மீண்டும் அரசியலில் பிரவேசிக்க – அனைத்துத் தகுதிகளும் கொண்ட மனிதனாக – அவர் செராஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார்.

அதைத் தொடர்ந்து அவரை வரவேற்க, நாளை மாலை பெட்டாலிங் ஜெயா பாடாங் தீமோர் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்தப் பொதுக் கூட்டத்தில் இரவு 11.00 மணியளவில் அன்வார் இப்ராகிம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அன்வார் முதன் முறையாகக் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் என்பதால் அவரது உரையைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரளுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.