Home தேர்தல்-14 அபாண்டி அலியும் வெளிநாடு செல்ல முடியாது

அபாண்டி அலியும் வெளிநாடு செல்ல முடியாது

939
0
SHARE
Ad
அபாண்டி அலி

புத்ரா ஜெயா – முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது என்றும் அதில் பல முக்கிய பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து நடப்பு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலியும் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என மலேசியாகினி வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

அபாண்டி அலி விடுமுறையில் செல்வார் என்றும் அவருக்குப் பதிலாக அவரது பணிகளை அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் மேற்கொள்வார் என்றும் மகாதீர் நேற்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice