கோலாலம்பூர் – ஒருசில தரப்புகள் கூறி வருவதைப் போல் இன்று புதன்கிழமை விடுதலையாகப் போகும் தனது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை பிரதமராக்க நாங்கள் அவசரப்படவில்லை என பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசா தெரிவித்துள்ளார்.
“அன்வாரின் விடுதலை குறித்த நடைமுறைகளைப் பூர்த்தி செய்து அவரை விடுதலை செய்வதும், துன் மகாதீரின் தலைமையிலான அரசாங்கத்தை வலுப்படுத்துவதும்தான் எங்களின் நோக்கமே தவிர, மற்றபடி அன்வாரை அடுத்த பிரதமராக்க நாங்கள் அவசரப்படவில்லை” என்றும் வான் அசிசா நேற்று செராஸ் மருத்துவமனையில் இருந்து வரும் தனது கணவரைச் சந்தித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் துன் டாயிம் சைனுடின் சிங்கை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “அன்வாரை உடனடியாக பிரதமராக்குவது முட்டாள்தனமானது” எனக் கூறியிருந்தார்.