Home நாடு அன்வார் விடுதலையானார்!

அன்வார் விடுதலையானார்!

1333
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், செராஸ் மறுவாழ்வு மையத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது பேரரசர் சுல்தான் முகமது V-ஐச் சந்திப்பதற்காக இஸ்தானா நெகாராவிற்குச் சென்றிருக்கிறார்.

அங்கு, பேரரசர் அன்வாருக்கு முழு பொதுமன்னிப்பு வழங்கவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஓரினப்புணர்ச்சி வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நன்னடத்தைக் காரணமாக அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி விடுதலையாகவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.