Home தேர்தல்-14 நஜிப் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்

நஜிப் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்

1013
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து 1எம்டிபி நிறுவனம் தொடர்பிலும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலும் தனது வாக்குமூலத்தை வழங்க வேண்டும் என நஜிப் துன் ரசாக் பணிக்கப்பட்டுள்ளார்.

நஜிப்பிடம் இருந்து வாக்குமூலம் பெற ஊழல் தடுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தனது வாக்குமூலத்தை வழங்குவதாக நஜிப் தெரிவித்திருக்கிறார் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1எம்டிபி பணம் 2.6 பில்லியன் ரிங்கிட்டை நஜிப் பெற்றதாக புகார்கள் எழுந்து பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டு நஜிப் தவறுகள் எதுவும் புரியவில்லை என விசாரணைகள் மூடப்பட்டன.

#TamilSchoolmychoice

தற்போது மீண்டும் இந்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.