Home தேர்தல்-14 நஜிப் வீட்டில் சாக்லெட் திருடிய காவல் துறையினர்

நஜிப் வீட்டில் சாக்லெட் திருடிய காவல் துறையினர்

1471
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நஜிப்பின் பிள்ளைகள் தங்கியிருக்கும் இல்லத்தில் அவ்வாறு சோதனைகள் நடத்திய காவல் துறை அதிகாரிகள் அங்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளை எடுத்து சாப்பிட்டனர் என நஜிப் புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த புக்கிட் அமான் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் இயக்குநர் அமார் சிங் (படம்), அந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்றும் அது உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதுபோன்ற பழக்கவழக்கங்கள் காவல் துறையில் இருப்பதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன் எங்களின் பணிகளை நாங்கள் முறைப்படி தொடர்வோம் என்றும் அமார் சிங் கூறியிருக்கிறார்.