Home தேர்தல்-14 “ஊடக வழியான விசாரணைகளை நிறுத்துங்கள்” – ரோஸ்மா கண்டனம்

“ஊடக வழியான விசாரணைகளை நிறுத்துங்கள்” – ரோஸ்மா கண்டனம்

1088
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடை இல்லங்களில் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, அது தொடர்பான புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு, தங்களைக் குற்றவாளிகள் போன்று சித்தரித்து, ஊடகங்களின் மூலமாக விசாரணைகளை நடத்திவரும் காவல் துறையின் போக்குக்கு ரோஸ்மா மன்சோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

தங்களின் இல்லங்களில் உள்ள ஆபரணங்கள், பொருட்கள், ஆகியவை புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, ஊடகங்களின் வழியாக வெளியிடப்படுவதைக் கண்டித்து தனது வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக விடுத்த அறிக்கையில் ரோஸ்மா தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.