Home தேர்தல்-14 “முழு மன்னிப்பு வழங்குங்கள் – நடந்தது அனைத்தையும் சொல்கிறேன்” – சைருல் கூறுகிறார்

“முழு மன்னிப்பு வழங்குங்கள் – நடந்தது அனைத்தையும் சொல்கிறேன்” – சைருல் கூறுகிறார்

1355
0
SHARE
Ad

சிட்னி – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் காவல் துறையின் முன்னாள் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரரான சைருல் அசார் உமார் (படம்) தனக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டு, மலேசியாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டால், நடந்த அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாகவும் கூறியிருக்கிறார்.

சைருல் தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் சிட்னியில் வாழ்ந்து வருகின்றார்.

நேற்று சனிக்கிழமை (மே 19) மலேசியாகினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கும் சைருல், குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவராவார். மற்றொருவரான அசிலா ஹட்ரி கோலாலம்பூரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இருவருக்குமே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தீர்ப்புக்கு முன்னதாக ஆஸ்திரேலியா சென்ற சைருல் அங்கேயே தங்கிவிட்டார். பின்னர் ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பலரும் தன்னை ஓர் அரசியல் கைதியாகத்தான் பார்க்கின்றனர் என்றும் தன்மீது வேறு எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் சைருல் தெரிவித்திருக்கிறார்.

“நான் ஏற்கனவே மகாதீருக்கும், அன்வாருக்கும் கீழ் பணியாற்றியிருக்கிறேன். அவர்களின் வெற்றிக்கு நன்றி கூறுவதோடு, எனது வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட அறைகூவல் விடுத்திருக்கும் அன்வாருக்கும் நன்றி கூறுகிறேன்” என்றும் சைருல் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.