Home நாடு ஜமால் யூனுஸ் கைது செய்யப்பட்டார்!

ஜமால் யூனுஸ் கைது செய்யப்பட்டார்!

1330
0
SHARE
Ad
டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் தனது கைத்துப்பாக்கியை வேண்டுமென்றே பகிரங்கமாக வெளியே காட்டியதற்காக காவல் துறையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 22) பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தனது கைத்துப்பாக்கியை ஒரு புகைப்படத்தின் வழி காட்டியதற்காக அவர் அம்பாங் புத்திரி மருத்துவமனையில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்திருக்கிறார்.

ஜமால் கைது செய்யப்பட்டிருக்கும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனையும் அல்லது அதிக பட்சம் 2,000 ரிங்கிட் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

#TamilSchoolmychoice

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜமால் அங்கேயே காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

ஜமால் யூனுஸ் மீது இருந்து வரும் மேலும் சில குற்றச்சாட்டுகளும், காவல் துறை புகார்களும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மஸ்லான் மன்சோர் தெரிவித்திருக்கிறார்.