Home இந்தியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

1284
0
SHARE
Ad

தூத்துக்குடி – தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் போது கலவரம் வெடித்தது.

இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர்.

மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.