Home தேர்தல்-14 நஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்

நஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்

1070
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று காலை செவ்வாய்க்கிழமை (22 மே)  புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில், 1எம்டிபி விசாரணை தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் உரையாடினார்.

தன்னை விசாரித்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் குழுவினர் தொழில் நிபுணத்துவத்தோடு நடந்து கொண்டனர் எனப் பாராட்டிய நஜிப், மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்காக தன்னை வரும்படி ஊழல் தடுப்பு ஆணையத்தினர் பணித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.