Home நாடு முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி: அமையப் போவது பினாங்கிலா? சிலாங்கூரிலா?

முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி: அமையப் போவது பினாங்கிலா? சிலாங்கூரிலா?

1451
0
SHARE
Ad
ஏப்ரல் 5-ஆம் தேதி மகாதீர் இந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது…

கோலாலம்பூர் – நாட்டின் முதலாவது தமிழ் இடைநிலைப் பள்ளி அமையப் போவது பினாங்கு மாநிலத்திலா அல்லது சிலாங்கூர் மாநிலத்திலா என்ற ஆர்வம் தமிழ்ப் பற்றாளர்களிடையே அதிகரித்து வருகிறது.

பொதுத் தேர்தலுக்கு முன்பாக, பக்காத்தான் ஹரப்பான் இந்தியர்களுக்காக 5 ஏப்ரல் 2018-ஆம் நாள் வெளியிட்ட பிரத்தியேக தேர்தல் அறிக்கையில், நாட்டின் முதலாவது தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்போம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஏற்கனவே, பினாங்கு மாநிலம் தமிழ் இடைநிலைப் பள்ளியை பினாங்கில் அமைத்துக் கொள்ள அதற்குரிய நிலம் தரத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்திலும், சுங்கை பூலோ வட்டாரத்தில் தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் புதிய கல்வி அமைச்சராக மஸ்லீ மாலிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய தமிழ் இடைநிலைப் பள்ளி அமைவதற்கும் செயல்படுவதற்கும் கல்வி அமைச்சின் அனுமதியும், ஒத்துழைப்பும் தேவையாகும்.

இதைத் தொடர்ந்து தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றி வரும் பக்காத்தான் அரசாங்கம் நாட்டின் முதலாவது தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான முறையான அறிவிப்பையும் – எந்த மாநிலத்தில் அப்பள்ளி அமையும் – அதன் பாடத் திட்டங்கள் எவ்வாறு அமைந்திருக்கும் – என்பது போன்ற விவரங்களையும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.