கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 22) பிற்பகலில் கைது செய்யப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் 3 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை (மே 25) ஜமால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
தனது கைத்துப்பாக்கியை வேண்டுமென்றே ஒரு புகைப்படத்தின் வழி காட்டியதற்காக அவர் அம்பாங் புத்திரி மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.
ஜமால் கைது செய்யப்பட்டிருக்கும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனையும் அல்லது அதிக பட்சம் 2,000 ரிங்கிட் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.