Home தேர்தல்-14 தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் கலைப்பு!

தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் கலைப்பு!

1204
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று புதன்கிழமை காலையில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

தரைப் பொதுப் போக்குவரத்து விவகாரங்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்பாட் (SPAD-Land Public Transport Commission) எனப்படும் தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் கலைக்கப்படுவதாகவும், அதன் பணிகளும், அதிகாரங்களும் மீண்டும் போக்குவரத்து அமைச்சின் வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார்.

வாடகை வண்டிகள் (டாக்சி) மற்றும் லாரிகள், பேருந்துகள் போன்ற வாகனங்களின் போக்குவரத்து உட்பட்ட அதிகாரங்கள் ஸ்பாட் ஆணையத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும். இனி இவை யாவும் போக்குவரத்து அமைச்சாலேயே நிர்வகிக்கப்படும்.