Home தேர்தல்-14 முதல் அமைச்சரவைக் கூட்டம்: அமைச்சர்களுக்கான ஊதியத்தில் 10% குறைப்பு

முதல் அமைச்சரவைக் கூட்டம்: அமைச்சர்களுக்கான ஊதியத்தில் 10% குறைப்பு

974
0
SHARE
Ad
மகாதீரின் முதல் அமைச்சரவைக் கூட்டம்

புத்ரா ஜெயா – கடந்த மே 10-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இன்று புதன்கிழமை (மே 23) தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை துன் மகாதீர் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல அதிரடி முடிவுகளை மகாதீர் அறிவித்தார்.

அமைச்சர்கள் தங்களின் ஊதியத்தில் 10 விழுக்காடு குறைத்துக் கொள்ள ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் மகாதீர் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்னொரு அதிரடி முடிவாக ‘ஸ்பாட்’ எனப்படும் தரை பொதுப் போக்குவரத்து ஆணையம் கலைக்கப்படுவதாகவும் மகாதீர் அறிவித்தார்.

துன் மகாதீர் அமைச்சரவையின் குழுப்படம்