Home Photo News சுகாதார அமைச்சுப் பொறுப்பு ஒப்படைப்பு (படக் காட்சிகள்)

சுகாதார அமைச்சுப் பொறுப்பு ஒப்படைப்பு (படக் காட்சிகள்)

1927
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – ஆட்சி மாற்றம் ஏற்ற பின்னர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் அமைச்சுகளுக்குத் திரும்பி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

புதிய சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரான அமானா கட்சியின் டாக்டர் சுல்கிப்ளி அகமட் வியாழக்கிழமை 24 மே 2018 ஆம் நாள் சுகாதார அமைச்சுக்கு வருகை தந்தபோது, முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமும் அமைச்சுக்கு வருகை தந்து, புதிய அமைச்சரிடம் அடையாளமாகத் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.

மற்ற அமைச்சுகளில் இதுபோன்று நடந்ததாகத் தெரியவில்லை. முன்னாள் அமைச்சரும் இந்நாள் அமைச்சரும் மரியாதை நிமித்தம் ஒருவருக்கொருவர் சந்தித்து, அடையாளமாக அமைச்சுப் பொறுப்புகளை புதிய அமைச்சர் ஏற்றுக் கொண்டது சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice