Home Photo News ஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)

ஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)

3532
0
SHARE
Ad
மாசாய் தமிழ்ப் பள்ளியின் சார்பாக பரிசைப் பெறும் மாசாய் தமிழ்ப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம்

ஹாங்காங் – நேற்றும் இன்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொண்ட ஜோகூர் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

பல நாடுகளின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிறந்த ஆடை அலங்காரத்துக்கான விருதை மாசாய் தமிழ்ப் பள்ளி பெற்றது.

தொடர்ந்து சிறந்த நாடகத்துக்கான விருதுகள் வரிசையில் 3-வது இடத்திற்கு (2nd Runner-up) மாசாய் தமிழ்ப் பள்ளி படைத்த நாடகம் தேர்வானது.

#TamilSchoolmychoice

பல நாடுகள் கலந்து கொண்ட அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி ஒன்றில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட தமிழ்ப் பள்ளி இரண்டு விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: