Home தேர்தல்-14 மகாதீருக்கு அமைதிக்கான நோபல் பரிசு – 41 ஆயிரம் பேர் ஆதரவு

மகாதீருக்கு அமைதிக்கான நோபல் பரிசு – 41 ஆயிரம் பேர் ஆதரவு

1911
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசுகளின் வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு துன் மகாதீருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற இணையம் வழியான கோரிக்கை தொடங்கப்பட்டு அதற்கு இதுவரையில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் ஆதரவை இணையம் வழி தெரிவித்துள்ளனர்.

மாற்றம் விரும்புவர்களுக்கான இணையத் தளம் சேஞ்ச் – Change.org. இந்தத் தளத்தில் பல்வேறு அம்சங்களில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவு பொதுமக்களிடம் கோரப்படும்.

அந்த வகையில் தனது 93-வது வயதில் ஜனநாயக ரீதியான போராட்டத்தைத் தொடக்கி, வாக்குப் பெட்டிகளின் மூலம் 60-ஆண்டு கால தேசிய முன்னணி ஆட்சியை மாற்றி, சாதனை புரிந்த மகாதீருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென அலெக்சாண்டிரியா அபிஷேகம் என்ற பெண்மணி தனது கோரிக்கை மனுவைப் பதிவு செய்ய இதுவரையில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

50 ஆயிரம் கையெழுத்துகளைப் பெற இலக்கு கொண்டிருக்கும் இந்தத் திட்டத்தில் ஆதரவு தெரிவிக்க விரும்பினால் நீங்களும் கீழ்க்காணும் இணையத் தளத்தில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவிக்கலாம்:

https://www.change.org/p/nobel-foundation-tun-dr-mahathir-bin-mohamad-nomination-for-the-nobel-peace-prize-2018?pt=AVBldGl0aW9uAOOzyQAAAAAAWwqSk%2BQ%2FGjpkMjFlMTE0Zg%3D%3D&source_location=discover_feed