Home வணிகம்/தொழில் நுட்பம் வாட்சாப்பில் இனி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் காணொளிகளைப் பார்க்கலாம்!

வாட்சாப்பில் இனி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் காணொளிகளைப் பார்க்கலாம்!

1055
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டிருக்கும் காணொளிகளை வாட்சாப்பில் இருந்தபடியே பார்க்கும் வகையில் புதிய வசதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டிருக்கும் காணொளிகளின் இணைப்புகளை வாட்சாப்பில் பகிரும் போது அதனை சொடுக்கி சாட்டில் இருந்த படியே அக்காணொளியைப் பார்க்க முடியும்.

இந்த மாற்றங்கள் தற்போது 2.18.51 வெர்சனில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும், இந்த வசதி தற்போது அண்ட்ராய்டு பதிப்பில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.