Home நாடு ஹிண்ட்ராப்: ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல!

ஹிண்ட்ராப்: ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல!

1189
0
SHARE
Ad
பி.உதயகுமார் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – கடந்த சில மாதங்களாக பகிரங்கமாக அறிக்கைகள் எதுவும் விடுக்காமல் – 14-வது பொதுத் தேர்தலிலும் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருந்த ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவரான உதயகுமார் தற்போது திடீரென முன்வந்து 25 அம்ச பரிந்துரை ஒன்றை ‘அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக் குழுவிடம்’ நேற்று திங்கட்கிழமை (மே 28) சமர்ப்பித்துள்ளார்.

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவரான வேதமூர்த்தியின் சகோதரரான உதயகுமார், 2007 ஹிண்ட்ராப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட 5 போராளிகளில் ஒருவராவார்.

புதிய அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் 75 விழுக்காட்டு அடித்தட்டு பிரிவினர்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் தனது 12 பக்கக் கோரிக்கை மனுவில் உதயகுமார் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப்பின் தலைவர் என்றும் உதயகுமார் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்.